முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › சிறுவர்கள் அதிவேகமாக ஓட்டிய கார் : 12ஆம் வகுப்பு ம
உள்ளூர் செய்திகள் சிறுவர்கள் அதிவேகமாக ஓட்டிய கார் : 12ஆம் வகுப்பு மாணவர் பலி;
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடந்த சாலை விபத்தில், 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்த அனைவரும் 18 வயது நிரம்பாத மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி ஹூண்டாய் ஆக்சென்ட் (Accent) காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அரும்பாக்கத்தைச் சேர்ந்த நரேன் ஆகிய நண்பர்களும் காரில் பயணம் செய்துள்ளனர்.
தங்களது காரை அதிவேகமாக இயக்கியபோது தரப்பாக்கம் பகுதி சிவசங்கர் கேஸ் குடோன் எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதில்
* சாலையின் பக்கவாட்டு இரும்பு தடுப்பு தடுப்பில் கார் மோதியது.
* பின்னர் சாலை நடுவில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி
எதிர்ப்புற சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ (MMDA) பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகனும், 12ஆம் வகுப்பு மாணவருமான *நரேன் (17)* என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காதில் ரத்தம் வழிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் ஓட்டி வந்த நபர் உடன் பயணித்த இரண்டு சிறுவர்கள் என 3 மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்ததின் பெயரில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், *காரில் பயணம் செய்த ஐந்து பேரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள்* என்பது தெரியவந்துள்ளது. உரிமம் (Driving License) பெறாத சிறார்களின் கையில் கார் வழங்கப்பட்டதும், அவர்களின் அதிவேகப் பயணமுமே இந்த உயிர்ப்பலிக்குக் காரணம் என தெரியவந்துள்ளது..
இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



