5 தொகுதி இடைத்தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை..
திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருப்பதாகக் கூறப்பட்ட செந்தில் பாலாஜி, இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது கட்சியினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.



