ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் நெல்சன் திலீப்குமார்
ஜெயிலர் படத்தின் முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் மொத்தம் 580 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி கண்டிப்பாக நெல்சனின் மார்க்கெட்டை பான் இந்தியா அளவில் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.
நெல்சன் அடுத்தததாக ரஜினியும், கமலும் இணையும் KHXRK என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதுவும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது. இதனையும் முடித்துவிட்டு ஜூனியர் என்டிஆரை வைத்து சித்தாரா என்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு படம் இயக்கும் நெல்சன்; அதனை முடித்து ஹிருத்திக் ரோஷனை வைத்து ஹோம்பாலே பிலிம்ஸுக்கு ஒரு படம் இயக்குகிறாராம்.



