GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › நடிகர் விஜய்க்கு இயக்குனர் பேரரசு பாராட்டு
உள்ளூர் செய்திகள்

நடிகர் விஜய்க்கு இயக்குனர் பேரரசு பாராட்டு

👤 Author 🕐 26 Oct 2026, 09:26 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
நடிகர் விஜய்க்கு இயக்குனர் பேரரசு பாராட்டு
விளம்பரம்Advertisement
தவெக ஆட்சிக்கு இயக்குநர் பேரரசு பாராட்டு தெரிவித்தார்– சொந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் உடனடி நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது என்றார்

 இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஆதிக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தாம்பரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

‘ஆதிக்கம்’ திரைப்படத்தை எஸ்.ஆர்.ஏ. இப்ராஹிம் தனது சொந்தத் தயாரிப்பில் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பேரரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பேரரசு, தற்போது பெரிய திரைப்படம், சிறிய திரைப்படம் என்ற பாகுபாடின்றி அனைத்துப் படங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திரைத்துறையினரைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டுத் தெரிவித்த பேரரசு, மற்ற கட்சிகளை விடுத்து, சொந்தக் கட்சியினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது பாராட்டுக்குரிய அம்சம் என்றும் தெரிவித்தார்.

‘ஆதிக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement