ட்ரம்ப்பின் விமானத்தையே தாக்குவோம் ஈரான் பகிரங்க மிரட்டல்!.

அமெரிக்காவின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தையே தங்களால் சுட்டுவீழ்த்த முடியும் என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆனால், அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு என்பது நாம் நினைப்பதை விட பல மடங்கு வலிமையானது.
ட்ரம்ப் பயணம் செய்யும் ஏர்ஃபோர்ஸ் ஒன் வெறும் விமானம் அல்ல, அது ஒரு பறக்கும் கோட்டை. இதில் எந்தவொரு ஏவுகணைத் தாக்குதலையும் திசைதிருப்பும் Anti-Missile தொழில்நுட்பம் உள்ளது.
போர்க்களத்திற்கு அருகே செல்லும் போது, இந்த விமானத்தைச் சுற்றி எப்போதும் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானங்கள் பாதுகாப்பிற்காகப் பறந்து கொண்டிருக்கும்.
ட்ரம்ப் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பல நாட்களுக்கு முன்பே ரகசியப் பாதுகாப்புப் படையினர் (Secret Service) முகாமிட்டு அந்த இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
ஒரு நாட்டு அதிபரைத் தாக்குவது என்பது அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே துடைத்து எறியும் அளவிற்குப் பெரிய போருக்கு வழிவகுக்கும். ஈரான் ஏற்கனவே பலவீனமாக இருப்பதால், அவர்கள் இப்படி ஒரு தற்கொலை முயற்சியில் இறங்க மாட்டார்கள் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.



