பழனி கோவில் பிரசாதம் விலை உயர்வு
பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் ஆறு வகை பிரசாதங்களின் விலை நவம்பர் 1 முதல் உயர்த்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தயாரிப்புக்குத் தேவையான பொருட்களின் விலை ஏறியதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய விலை (இப்போதைய விலை அடைப்புக்குள்):
லட்டு 50 கிராம் – ₹20 (₹15)
அதிரசம் 50 கிராம் – ₹20 (₹15)
முறுக்கு 50 கிராம் – ₹25 (₹20)
தேன் தினை மாவு 50 கிராம் – ₹15 (₹10)
சர்க்கரைப் பொங்கல் 150 கிராம் – ₹20 (₹15)
புளியோதரை 150 கிராம் – ₹20 (₹15)



