கரூரில் உயிர் இழந்தவர்களுக்கு தற்காலிக பணி தான் கோர்ட் உத்தரவு

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாகவே பணி நியமனம் வழங்கப்படக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தருமபுரியில் பஸ் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசு பணி வழங்கப்படவில்லை. அரசுப் பணி வழங்குவதில் உரிய விதிகள் பின்பற்றவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வாதத்தைக் கேட்ட நீதிபதிகள்,'இன்று பிற்பகல் 3 மணிக்கு கரூரில் விழா நடத்தலாம். பணி நியமன உத்தரவு என்பது தற்காலிகமானது. நியமனம் பெறுவோர் முதல் மாத சம்பளம் பெறுவதற்கு முன் ஜூலை 21 ல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்,' எனத் தெரிவித்தனர்.
மேலும், அரசுப்பணி வழங்குவதற்கு எதிரான வழக்கில் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.



