அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா சபாநாயகர் முடிவு செல்லும்
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிராகத் தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது.
இந்தச் சூழலில், ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுச் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது ஆர் எம் எல் ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது



