தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி!
தமிழ்நாட்டில் 128 இடங்களில் அக்டோபர் 25, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி! விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவும் உத்தரவு.
பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறிவருவதாகவும் சாடல்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கான நேரம், வழித்தடங்கள், இடங்களை அக்டோபர் 19-க்குள் இறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.



