அடுத்த 24 மணி நேர மழை நிலவரம்.
பகல் நேரத்தில் சென்னையில் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது. மழை மேகங்கள் பொன்னேரி – பழவேற்காடு பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளன.
பகல் நேரத்தில் வெயில் தலைகாட்டக்கூடும். இருப்பினும், சில இடங்களில் தனித்தனியாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று இரவு முதல் நாளை காலை வரை சென்னையில் மீண்டும் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆனால், நேற்று இரவு பெய்த மழையின் தீவிரத்தைப் போன்று இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.



