விஜய் வீடு மாறுவாரா?

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது தற்போதைய ஈசிஆர் நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை போயஸ் கார்டன் பகுதிக்குக் குடிபெயரத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நிர்வாக வசதி, போக்குவரத்துச் சிக்கல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பு எம்எல்ஏவாக போட்டியிட்டதால் பெரம்பூருக்கே அவர் மாற்றலாகி வருவதாக சொன்ன நிலையில் தற்போது போயஸ் கார்டனுக்கு விஜய் வருவதால் மீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.



