கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

கோடைக் காலம் ஆரம்பித்து விட்டது. அக்னி உக்கிரமடை வதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கி விட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப் புகளிலிருந்து நம்மைத் தற்காத் துக் கொள்வது எப்படி?
வியர்க்குரு
மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல் சியஸ். கோடையில் வளிமண் டல வெப்பநிலை சர்வசாதா ரணமாக 40லிருந்து 45 டிகிரி யைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பரா மரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத் துக்கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் கால மின் லோஷ னைப் பூசினால் அரிப்பு குறை யும்.
வேனல் கட்டி
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளி யேற முடியாமல் வியர்க்குரு வில் அழுக்கு போல் தங்கிவி டும். அப்போது அங்கு பாக் டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணா கிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலை வதைத் தவிர்க்க வேண்டும்.
பூஞ்சை தொற்று
உடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப் பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன் றும். படையைக் குணப்படுத் தும் களிம்பு அல்லது பவுட ரைத் தடவிவர இது குணமா கும். உள்ளாடை களைச் சுத்தமாக வைத்துக் கொண் டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல்மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும் போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடின மாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவு தான் நீர்க்க டுப்பு.நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.



