மகளிருக்கு மாதம் ரூ. 3,000! பாஜகவின் தேர்தல் அறிக்கை…

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தலையொட்டி கொல்கத்தா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதன்படி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் எந்த ஊடுருவல்காரர்களையும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படாது, முழுக்க மேற்கு வங்க மாநில மக்களின் நலனில் கவனம் செலுத்துவோம்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உறுதி செய்யப்படும்;
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 45 நாள்களுக்குள் அமல்படுத்தப்படும்.
ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பாஜக-வின் அனைத்துத் திட்டங்களையும் மேற்கு வங்கத்தில் முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று கூறினார்



