மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன் வீடியோ வைரல்

ஜமீன் பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சனா பாத்திமா . இவருக்கும் இவருடைய கண்வர் முகமதுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த சில மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சனா பாத்திமா வீடு அமைந்துள்ள ஜமீன் பல்லாவரத்துக்குச் சென்ற அவருடைய கணவர் முகமது கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
கண்ணாடி பாட்டிலில் கொண்டு வரப்பட்ட ஆசிட் சனா பாத்திமா மீது எறியப்பட்ட போது அவருடைய கண்ணில் பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சனா பாத்திமா சிகிச்சை பெற்று வருகிறார்.இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் அதே பகுதியில் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க வந்த முகமதுவை கைது செய்த போலீசார் நிதிபதி முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



