சாலையில் கிடந்த 5பவுன் நகையை போலிசில் ஒப்படைத்த தொழிலாளி

தாம்பரம் அருகே சாலையில் கிடந்த ஐந்து பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தாம்பரம்:- தாம்பரம் அடுத்த சேலையூர் ,ராஜாஜி நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (54) நேற்று இரவு அகரம்தென் பிராதான சாலை அம்பேத்கார் நகரில் சாலையில் பை ஒன்று இருப்பதை பார்த்தார் அதனை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றவர் தனது மகன் சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். அந்த பையை திறந்து பார்த்த போது அதில் ஐந்து சவரன் தங்க நகை இருப்பதை கண்டவர் உடனடியாக சேலையூர் காவல் நிலையத்தில் நகை பையை ஒப்படைத்தார்.
அன்றே அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் ஐந்து சவரன் நகை பை காணாமல் போனதாக சேலையூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்,
நகை பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த முருகன் மற்றும் அவரது மகன் சீனிவாசன் ஆகியோரை சேலையூர் சரக உதவி ஆணையர் கிறிஸ்டி ஜய்சில் மற்றும் குற்ற பிரிவு ஆய்வாளர் முகமது பொன்னாடை போர்த்தி பாராட்டினர்,
பின்பு ஆவணஙகளை சரிபார்த்து ஐந்து சவரன் நகையை உரிமையாளர் ரேவதியிடம் ஒப்படைத்தனர்.



