அதிமுகவில் இணைந்த காளியம்மாள்

நாம் தமிழர் கட்சியில் பிரபலமான பேச்சாளராக இருந்தவர் காளியம்மாள். பின்னர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகினார்.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து இந்த கட்சியில் இணைந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் காளியம்மாள்.
"அரசியல் கட்சியில் இருந்து விலகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின்பாக அரசியல் பயணமாக அதிமுகவில் இணைந்துள்ளேன். ஒரு எளிய மக்களுக்கான அரசியல் வாய்ப்பை உருவாகக்கூடிய அமைப்பில், அந்த மக்களுக்கான உரிமை குறித்து உரக்க குரல் கொடுப்பதற்கான களத்தில் இருக்கிறேன். இந்த தேர்தல் துவங்கி, மீண்டும் எனது அரசியல் பயணம் ஆரம்பிக்கும். அதிமுகவை நான் தேர்ந்தெடுத்ததுக்கான காரணம், இக்கட்சியின் தலைவர் சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தவர்.
ஒரு அடிப்படை குடும்பத்தில் இருந்து வந்து ஒரு தலைமையை எட்ட முடியும் என்ற ஜனநாயகம் இந்த இயக்கத்தில் உள்ளது.நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, இன்னொரு கட்சிக்கு நான் போகாமல் இருந்ததுக்கான காரணம், உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பங்களிப்பை எப்படி உறுதி செய்வது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



