கரூர் வழக்கு: விஜய்க்கு சிபிஐ சம்மன்?

கரூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் த.வெ.க தலைவர் விஜய் ஏற்கனவே டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக (நாளை) மார்ச் 10ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த தேதியில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும், அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சிபிஐ குறிப்பிடும் தேதியில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் விஜய் தரப்பில் சிபிஐக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



