2ஆவது குழந்தைக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு.

ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை ஈடுகட்ட, இரண்டாவது குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர அரசு பரிசீலித்து வருவதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
ஆந்திராவின் தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.5 ஆக உள்ளது. இது மக்கள் தொகை மாற்றத்திற்குத் தேவையான சராசரி அளவான 2.1-ஐ விடக் குறைவு. அதை உயர்த்த வேண்டும் என்ற முடிவை ஆலோசித்து வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



