தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும் தனித்தேர்வர்கள் 27,783 பேரும் எழுதுகின்றனர்.
7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3412 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுதுகின்றனர். இன்று தொடங்கிய பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வினை 4540 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். 44 ஆயிரத்து 624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



