காஸ்ட்லி' விலையில் 'கருகிய' சட்டை

'Iron Box' மூலம் சூடாக்கி கருகிய டிசைனில் உருவாக்கப்பட்ட வெள்ளை சட்டைக்கு கிடைத்த அமோக வரவேற்பு இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளது.
அந்த சட்டையின் விலை இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது தான் இணையவாசிகளின் வயிறை எரியவிட்டுள்ளது. அதில் ஒருவர், "என் அம்மா இத ஃப்ரீயாவே செஞ்சி கொடுத்திருக்காங்க.. இதுக்கு 1 லட்சமா" என கேட்டு நக்கலடித்துள்ளார்.



