GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செலவு ரூ.1445.
தமிழகம்

தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செலவு ரூ.1445.5 கோடி/அதிமுக எதிர்ப்பு

👤 Admin 🕐 10 Feb 2026, 13:03 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரம்:-தாம்பரம் மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

அப்போது தாம்பரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் திமுக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் மோதல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் 750 கோடி ரூபாயில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் பேட்டி.

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் க.வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மாநராட்சி ஆணையர் சீ.பாலசந்தர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் நிதிகுழு தலைவர் ரமணிஆதிமூலம் 2026-2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்பித்தார்,

கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், வே. கருணாநிதி, இந்திரன், ஜோசப்அண்ணாதுரை, எதிர்கட்சி தலைவர் சேலையூர் ஜி.சங்கர், மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ஜெகன், சுரேஷ், மகாலஷ்மி கருணாகரன், கற்பகம் சுரேஷ், புகழேந்தி மாற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிதி ஆண்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு 1445 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது மாநகராட்சி வருவாயாக 1447 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இனந்த பட்ஜெட் தாக்கலில் புதிய திட்டங்களை மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி அறிவித்தார்.

அதில் நவீன கழிப்பறைகள் ரூபாய் 64.5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பூங்காக்கள் விளையாட்டு திடல் உருவாக்குதல் மண்டல ஒன்றில் நான்கு பூங்கா பணிகள் ரூபாய் 5.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்ட அலுவலகங்கள் மண்டலம் 1 2 3 மற்றும் 5 ஐந்தில் மொத்தம் ஒன்பது இடங்களில் கோட்டை அலுவலகங்கள் ரூபாய் 7.92 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி மண்டலம் மூன்றில் ஜமீன் ராயப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் மின் தூக்கி மண்டலம் நாளில் மைய அலுவலகத்தில் மின் தூக்கி ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டலம் ஐந்தில் ராஜாம்பாள் நகர் பகுதியில் கால்நடைகளுக்கான கோசாலை ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.கழிவறைகள் சுத்தம் செய்யும் 12 கம்ப்ரஸர் இயந்திரம் 27 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

விளம்பரம்Advertisement

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் நிலைப்படுத்துதல் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று வரும் 6873 மாநகரங்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது 100 சதவீத தேர்ச்சி விகிதம் அடையும் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை ரூபாய் 4.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் மண்டலம் ஒன்றில் கல்நடை பகுதியில் நாய்களுக்கான கருத்தடை மையம் ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களில் மழைநீர் வடிகால்வார்கள் பணிகள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது என திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த ஆண்டு அறிவித்த பட்ஜெட்டில் 20 சதவீதம் கூட பணிகள் நடைபெறவில்லை, 750 கோடி பாதாள சாக்கடை திட்ட பணியில் நடைபெறும் என அறிவித்தீர்கள் அந்த பணிகளின் நிலை என்ன,

2 எம்எல்ஏக்கள்,ஒரு எம்பி இருந்தும் தாம்பரம் மாநகராட்சியில் அறிவித்த திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி அமலியில் ஈடுபட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

இதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் ஜி.சங்கர் கூறுகையில்:-

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை 750 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு எந்த பணியும் நடைபெறவில்லை,கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பணிகள் முழுமை அடையவில்லை,இதனை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்டால் மண்டல தலைவர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் மிரட்டுகிறார்கள்.

மாநகராட்சி பகுதியில் திமுக கோஷ்டி மோதல் காரணமாக மேயர் துணை மேயர் அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்வதில்லை இதனால் மாநகராட்சி முழுவதும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement