சுரங்கத்தில் வெடி விபத்து: 18 பேர் பலி; பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!!!

வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்தது.
இந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேகாலயா முதல் மந்திரி கான்ராட் சங்மா இரங்கலை தெரிவித்ததுடன், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டது.மேலும் சட்டவிரோதமாக இயங்கி வந்த இந்த சுரங்க விபத்திற்கு காரணமானவர்கள் மீது 'கடுமையான சட்ட நடவடிக்கை' எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.



