காலை உணவு தீர்ந்ததால் காத்திருந்த மாணவிகள்.
கிருஷ்ணகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை உணவு தீர்ந்ததால் வகுப்புக்கு செல்ல முடியாமல் காத்திருக்கும் மாணவர்கள்.
8.45 மணிக்கு மாவட்ட ஆட்சியர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்த நிலையில், முதலில் வந்த மாணவிகளுக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது.
450 பேருக்கு உணவு தயாரிக்க வேண்டிய இடத்தில், குறைந்த மாணவர்களுக்கு மட்டுமே உணவு தயாரித்து வழங்கப்பட்டதால் பிற மாணவர்கள் உணவு இன்றி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



