GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › ரேபிடோ பைக் ஓட்டுனரிடம் ஐபோன் கொள்ளை செயலி மூலம் ம
உள்ளூர் செய்திகள்

ரேபிடோ பைக் ஓட்டுனரிடம் ஐபோன் கொள்ளை செயலி மூலம் மூன்று பேர் சிக்கினார்

👤 Author 🕐 26 Sep 2026, 05:21 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
ரேபிடோ பைக் ஓட்டுனரிடம் ஐபோன் கொள்ளை செயலி மூலம் மூன்று பேர் சிக்கினார்
விளம்பரம்Advertisement

குரோம்பேட்டையில் Rapido ஓட்டுநரிடம் கத்திமுனையில் iPhone 15 பறிப்பு,Find My Device App மூலம் சிக்கிய மூவர் கைது*செய்யப்பட்டனர்

மதுரையைச் சேர்ந்த விஷ்வகுமார் (வயது-21) டிப்ளமோ படித்த இவர் கடந்த 6 மாதங்களாக தாம்பரம் சானடோரியம் பகுதியில் வீடு எடுத்து தங்கி Rapido Bike Taxi ஓட்டி வருகிறார்.

இரவு நேரத்திலும் வாகனம் ஓட்டினால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் வழக்கம் போல் நள்ளிரவில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே Duke பைக்கில் அமர்ந்து கொண்டு இருந்தார் அப்போது நள்ளிரவு 2 மணியளவில் பல்சர் பைக்கில் வந்த 3 பேர்,விஷ்வகுமாரிடம் ஊருக்கு புதுசா? என கேட்டுள்ளனர்.அவர் ஆமாம் என்று சொன்னதும்,நாங்கள் லோக்கல் தான் எனக்கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி,அவர் இரவு பகலாக உழைத்து வாங்கிய விலை உயர்ந்த iPhone 15 மற்றும் Oppo போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த விஷ்வகுமார், அருகில் இருந்த ஆட்டோ ஓட்டு நரிடம் போன் வாங்கி 100-க்கு கால் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று புகார் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில் விஷ்வகுமாரின் நண்பர் அசோக்குமார், Oppo போனில் Find My Device போன்ற ஆப் இன்ஸ்டால் செய்து இருப்பதாகவும்,அதன் மூலம் திருடு போன போனின் லொகேஷனை கண்டு பிடிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.நண்பரை வரவழைத்து லொகேஷனை பார்த்தபோது பல்லாவரம் பகுதியில் காட்டியது.

உடனே அங்கு விரைந்த குற்றப்பிரிவு போலீசார்,திருடிய போனை எப்படி சுவிட்ச் ஆப் செய்வது என தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அதன் பின்னர் குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில்
அனகாபுத்தூரைச் சேர்ந்த தமிழ் அன்சாரி (வயது-35) பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (எ) பல்லு பாலாஜி (வயது-30) இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் ஹமீத் ரியாஸ் (வயது -27) இவர் திருடுவதில் திறமைசாலி என்பதும் போலீசில் சிக்கிக் கொண்டால் அழுது உண்மையில் சொல்லாமல் சாதிக் ககூடிய நபர் என்பதும் பலமுறை சிறை சென்றவர் என தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவர்கள் இரவு 11,மணிக்கு மேல் பைக்கில் சுற்றி, தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்து குறைந்த விலைக்கு விற்று மது, கஞ்சா போதையில் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து  திருடப்பட்ட இரண்டு செல்போன்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டது.
Find My Device App மூலம் தொலைந்த போன் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், அனைவரும் தங்கள் செல்போனில் இதுபோன்ற ஆப்களை வைத்திருப்பது காணாமல் போன போன்களை விரைந்து மீட்க உதவும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

அதனைத் தொடர்ந்து மூவரிடம் போலீசார் தொடர்ந்து அவரது பாணியில் இது போன்ற திருட்டுச் சம்பூரில் எங்கெல்லாம் ஈடுபட்டு உள்ளனர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement