முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › கடன் தொல்லை கல்லூரி பேராசிரியர் தற்கொலை
உள்ளூர் செய்திகள் கடன் தொல்லை கல்லூரி பேராசிரியர் தற்கொலை
*தாம்பரம் அருகே கல்லூரி பேராசிரியர் கடன் தொல்லையால் தற்கொலை,செய்து கொண்டார்
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (46). இவர் நெடுங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 19, 17 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், குடும்பத்துடன் உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். காலையில் அவரை வீட்டில் காணாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் அவர் தற்கொலை செய்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் 15 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகின்றது இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



