GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டையில் உயிர்பலி வாங்கும் தண்டவாளம்
உள்ளூர் செய்திகள்

குரோம்பேட்டையில் உயிர்பலி வாங்கும் தண்டவாளம்

👤 Author 🕐 08 Oct 2026, 13:37 👁️ 6 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
குரோம்பேட்டையில் உயிர்பலி வாங்கும் தண்டவாளம்
விளம்பரம்Advertisement
தண்டவாளத்தை கடப்பதால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்



குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து  மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரச்சரத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில்  ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், குரோம்பேட்டை ரயில்பயணிகள் சங்கம், உள்ளாட்சி பிரிதிநிதிகள், நலசங்கத்தினர், வியாபாரிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் அழைக்கப்பட்டனர்,

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, சாந்திநகர் குடியிருப்போர் நலசங்க செயலாளர் குரோம்பேட்டை நாசர், குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ராமகிஷ்ணன், செயலாளர் அன்பு, சமுக ஆர்வலர்கள்  வழக்கறிஞர் ராமதாஸ், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று தண்டவாளத்தை கடக்காதீர், விலை மதிப்பற்ற உயிரை  பாதுகாத்து கொள்வீர், என கோஷமிட்டனர்,

ஏற்கனவே முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவி ரெயில் மோதி உயிரிழந்த தகவலை அனைவரும் வருத்தத்துடன் பேசிய நிலையில் இனிமேல் ஒருவரும் ரெயில் விபத்தில் சிக்காமல் இருக்க முறையான பாதைகளை பயன்படுத்துவது என உறுதியேற்றனர்.

அதே நேரத்தில் அங்கு  அலட்சியமாக தண்டவாளத்தை கடந்தவர்களை ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் தடுத்து  எச்சரிக்கை செய்தபோது பெண் பயணி ஒருவர் முறையான வழியில்லை, ராதாநகர் சுரங்கப்பதையுடன் இணைக்கப்படவில்லை, லிப்டில் 4 பேர் மேல் செல்ல முடியல, ஒரு கி.மீ தூரம் சுற்றி படிக்கட்டுகளில் ஏறி செல்லும் விதமாக உள்ளது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,


அதேபோல்  விழிப்புணர்வு ஏற்படுத்த அழைக்கப்பட்ட முக்கிய நபர்களும் மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர், டிகெட் பரிசோதகர்களிடம் முறையான வழியும், நகரும் படிக்கட்டு அமைக்காமல் விழிப்புணர்வு செய்வதால் என்ன பலன்   வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது,

இதனையடுத்து நடை மேம்பாலத்தில்  கிழக்கு பகுதியில் படிக்கட்டு அமைக்கவும், மேற்கு பகுதியில் லிப்ட் அருகே வழி ஏற்படுத்த உடனடியாக ஏற்பாடு செய்வதாகவும், மேலும் நிரந்தர தீர்வு கான ரெயில்வே நிர்வாகத்தினருக்கு  பரிந்துரை செய்வதாக கூறியதன் பேரில் கலைந்தனர்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement