முகப்பு ›
உலக செய்திகள் › மாணவர்கள் தூங்க வகுப்பறையிலேயே வசதி
உலக செய்திகள் மாணவர்கள் தூங்க வகுப்பறையிலேயே வசதி
சீனாவில் மாணவர்களின் மதிய இடைவேளை ஓய்வுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Sleeping Desk’ எனப்படும் தூங்கும் வசதியுடன் கூடிய மேசைகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
மாணவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் சோர்வை குறைத்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் அடுத்த வகுப்பில் கவனம் செலுத்துவதற்கு இந்த வசதி உதவக்கூடும் என்ற நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.
சாதாரண மேசையைப் போல இல்லாமல், மாணவர்கள் சாய்ந்து படுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கக்கூடிய வகையில் இந்த மேசைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்களின் ஓய்வு, கவனம், கற்றல் மற்றும் பள்ளி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது



