விஜய் பேச்சுஒரு 10 ரீல்ஸ் தேறும்உதயநிதி தாக்கு

சட்டப்பேரவையில் இன்றைக்கு முதல்வர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும். திட்டமிட்டு தான் இதை, அவர்கள் செய்கிறார்கள். இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சினிமா ஸ்பாட்டுக்கு ஒருவர் வந்து எப்படி, டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு, நடித்துவிட்டுச் செல்வாரோ, அதே போல இன்று முதல்வர் செய்திருக்கிரார். சட்டப்பேரவையை சினிமா தியேட்டர் போலவே ஆக்கிவிட்டனர்; சட்டப்பேரயில் இன்றைக்கு விசில் எல்லாம் அடிக்கிறார்கள். இதெல்லாம் இந்தச் சபை பார்க்காதது. என்றார்



