சட்டசபையில் நேரலை திடீர் ரத்து

சட்டசபையில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார் ஆனால் இன்று ஆளுநர் உரை மீதான தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தபோது நேரலை ரத்து செய்யப்பட்டது
இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “நேரலை என்பது வெறும் உருட்டா?. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அதிமுக விமர்சித்துள்ளது



