குடகுமலையில் மு க ஸ்டாலின் ஓய்வு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக, கர்நாடக மாநிலம் கூர்க் எனப்படும் குடகு மலைக்கு சென்றுள்ளார். அவருடன் மகன் உதயநிதி,மருமகன் சபரீசன் உள்பட குடும்பத்தினரும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மைசூரு சென்ற அவர்கள், அங்கிருந்து கார் மூலமாக குடகுமலைக்குச் சென்றுள்ளனர். ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதால், அதற்கு முன்பாக ஜூன் 2-ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.



