அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக தரப்பு விளக்கம்

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுகையில், “ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு. ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றவர்கள் தவெக நிர்வாகிகள் இல்லை” என்று கூறினார்.



