அஜித்பற்றிய ஆவணப்படம் தயாரிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தனது சொந்த அணியான 'அஜித்குமார் ரேசிங் மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தய பயணத்தை மையமாக கொண்டு கிளாடியேட்டர்ஸ்-இன் பர்ரூட் ஆப் சேலஞ்சர்ஸ் என்ற புதிய ஆவணப்படம் தயாராகியிருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கி யுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் கார் பந்தய போட்டிகளில் அஜித் பங்கேற்ற நேரடி காட்சிகளும் பதிவு செய்யப்பட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் கார் பந்தயக் காட்சிகள் தாண்டி, அவர் எதிர்கொண்ட பல்வேறு சவால்கள், யாரும் பார்த்திராத அஜித்குமாரின் இன்னொரு பக்கம் குறித்தும்
காட்சிப்படுத்தியுள்ளார்களாம். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.



