கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி?

வெயில் காலத்தில் உடலில் இருக்கும் நீர் வற்றிவிடாமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியமானது. வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்வு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முடி, கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறத்தை தருவது மெலனின் என்ற இரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தைத் தாக்கும் போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலனின் உதவுகிறது. தொடர்ச்சியாக சூரிய கதிர்கள் பட்டால் வெயில்படும் அந்த இடத்தில் மெலனின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்து விடுகிறது.கோடை காலத்தில் எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக் கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே, நிறைய தண்ணீர் குடியுங்கள். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டுவரும். எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணத்தை கொண்டும் பருக்களை கிள்ளி விடாதீர்கள். இதனால் பருக்கள் அதிகமாகும்.கோடை வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் கண்கள் உஷ்ணத்தால் எரியும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடு ங்கள், கண் எரிச்சல் பறந்துவிடும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள் அல்லது தடவிக்கொண்டால் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.



