தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின பேட்டி


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கல்லூரிக்கு குடும்பத்துடன் வந்த முதல்வர் ஸ்டாலின், வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும். என்னைப் போலவே தமிழ்நாட்டு வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்



