4 நாள் டாஸ்மாக் மூடல்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"ஏப்ரல் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 4ம் தேதி டாஸ்மாக் மூடல், இந்த 4 நாட்களும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடப்படும். ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். மது தயாரிப்பு நிறுவனங்கள் மதுபானங்களை வாகனத்தில் கொண்டு செல்லவும் தடை" என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.



