தாமரையில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள்

அதிமுக தலையிலான என்டிஏ கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதனிடையில் தற்போது என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் இரட்டை சின்னத்துக்கு பதிலாக தாமரையில் போட்டியிட விரும்புவது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனையடுத்து அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இரட்டை இல்லை சின்னத்தில் இல்லாமல் பாஜக சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிடவுள்ளது.
தாமரை சின்னத்தில் தமாகா
இதனிடையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. வாசன் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்திலே போட்டியிட உள்ளார்கள். ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, கும்பகோணம், ஒட்டன்சத்திரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



