முகப்பு ›
உலக செய்திகள் › டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு – கடும்
உலக செய்திகள் டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு – கடும் சர்ச்சை!

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதிபர் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 காரட் தங்க நாணயம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் மேசை மீது சாய்ந்து நிற்கும் உருவம் இடம்பெறும் என்றும், நாணயத்தின் மறுபுறத்தில் கழுகு சின்னம் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த நாணயம் பொதுப் பரிவர்த்தனைக்கானது அல்ல; சேகரிப்புக்கான நினைவுப் பொருளாக மட்டுமே வெளியிடப்பட உள்ளது.
உயிருடன் உள்ள அதிபரின் உருவம் நாணயத்தில் இடம்பெறுவது அரிதானது என்பதால், இந்த முடிவு அரசியல் மற்றும் சட்ட ரீதியாக விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



