நாளை முதல் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான வேளச்சேரி – பரங்கிமலை (St. Thomas Mount) இடையேயான 5 கி.மீ நீளமுள்ள பறக்கும் ரயில் (MRTS) சேவை மார்ச் 14, சனிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) இறுதியாக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நீட்டிக்கப்பட்ட பாதையில் ரயில்கள் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே இயக்கப்படும். இது சென்னையின் முக்கிய போக்குவரத்து முனையமான பரங்கிமலை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் நிலையத்துடன் இணைவதால், பயணிகள் எளிதாக மற்ற இடங்களுக்கு மாற முடியும்.
சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே 43 ஜோடி பறக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 2 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும், பரங்கிமலை – வேளச்சேரி இடையே 3 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



