3-வது நாளாக குறைந்த தங்கம்

இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 -க்கும், கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,600 சரிந்துள்ளது, இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



