GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மருத்துவர் ராமதா
தமிழகம்

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மருத்துவர் ராமதாஸ் மனு தள்ளுபடி

👤 Admin 🕐 20 Feb 2026, 11:12 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனுவை இன்று (பிப்ரவரி 20) சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாம்பழம் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் புதிதாக மேலும் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தார்.

“பா.ம.க. தலைவராக நான் உள்ளேன். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, உள்கட்சித் தேர்தல் நடத்தி தலைவராகத் தேர்ந்தெடுத்து பரிந்துரைக் கடிதத்தை அனுப்பினால் அதைப் பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தலைவராகப் பதிவு செய்யும் படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும் வரை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது” என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

விளம்பரம்Advertisement

“பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால் கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பான விவகாரத்தில் உரிமை இயல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement