தமிழக சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகிறது

2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்கிழமை) மீண்டும் கூட இருக்கிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
வழக்கமாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், ஒரு நிதியாண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த முறை சட்டசபை தேர்தல் வருவதால், குறுகிய கால செலவுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்றால், தேர்தலை மனதில் வைத்து அதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.



