வெற்றி உறுதி: அமித் ஷா.

ராகுல் காந்தி பொய் பேசுவதை தொழிலாக வைத்துள்ளார்; வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள் பயனடைவர்: அமித் ஷா
விவசாயிகள், மீனவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சில நாட்களில் புதுச்சேரிக்காக சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்.
நாராயணசாமியின் ஆட்சியில் புதுவையில் ஒரு தொழில்கூட தொடங்கப்படவில்லை.
நாராயணசாமிக்கு டெல்லி கஜானாவை நிரப்புவதுதான் வேலையாக இருந்தது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடத்தைக்கூட ஏலத்துக்கு விட்டுவிட்டார்.
2021இல் நடந்த புதுச்சேரி தேர்தலில் மக்கள் நமக்கு 44% ஆதரவை அளித்துள்ளனர்.
இம்முறை நம் கூட்டணிக் கட்சிகளுடன் 60% வாக்குகளைப் பெற்று, 24 இடங்களைப் பெறுவோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற பயணிப்போம்.
– காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு



