ஏர் இந்தியா விமான விபத்து – பரபரப்பான புதிய தகவல்

இத்தாலியைச் சேர்ந்த கோரியர் டெல்லா செரா (Corriere della Sera) என்ற நாளிதழ், ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் ஸ்விட்ச்சை விமானி வேண்டுமென்றே ஆஃப் செய்ததால் விபத்து நேர்ந்ததாக தெரிவித்துள்ளது.
நாளிதழின் கூற்றுக்கள் “தவறானவை மற்றும் அவை வெறும் ஊகங்கள்” என்று இந்திய விமான விபத்து புலனாய்வு அமைப்பு மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர்.



