இந்திய குடும்பங்களிடம் 30 ஆயிரம் டன் தங்கம் இருப்பு

இந்தியக் குடும்பங்களின் கைவசம் தற்போது ஒட்டுமொத்தமாக 30,000 டன் தங்கம் கையிருப்பு இருக்கும் என்று சமீபத்திய மதிப்பீடு கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, அதன் மதிப்பு 5 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான (ஜிடிபி) 4.125 டிரில்லியன் டாலரை விட அதிகம்.



