மூத்தோர் பொழுதுபோக்கு மையத்தை வேறு இடத்தில் கட்ட கோரிக்கை

நெமிலிச்சேரியில் மூத்தோர் பொழுதுபோக்கு மையம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை வேறு இடத்துக்கு மாற்றும்படி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்
நெமிலிச்சேரி ஓம் சக்தி நகர் எக்ஸ்டென்ஷன் சங்கம் மற்றும் இங்கிலிஷ் எலக்ட்ரிக் நகர் சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள இங்கிலிஷ் எலக்ட்ரிக் நகர் பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.
குழந்தைகள் இங்கு விளையாடுகிறார்கள், பெண்கள் அமைதியாக நேரம் செலவிடுகிறார்கள், பல மூத்த குடிமக்கள் தங்கள் உடல்நலத்திற்காக நடைப்பயிற்சி செய்கிறார்கள்.
பூங்காவை மேம்படுத்தி வந்தோம். மண் மட்டத்தை சுமார் 3 அடி உயர்த்தி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாட, கொடி கம்பம் அமைத்தனர் .
இந்த பூங்காவில் தற்போது மூத்தோர் பொழுதுபோக்கு மையம் (Senior Recreation Centre) கட்ட இருப்பதாக கேட்டு நாங்கள் அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொழுதுபோக்கு மையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும். இந்த பூங்காவில் போதிய விளக்குகளுடன் கூடிய நடைபாதை, பசுமையான புல்வெளி, மூத்த குடிமக்கள் அமர்வதற்கான இருக்கைகள், பூங்காவை பராமரிக்க நீர் வசதி, பாதுகாப்புக்காக நல்ல வேலிஅமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பூங்கா குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு பொதுப் பசுமை இடம். எங்கள் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கும், ஒற்றுமைக்கும் இது மிகவும் அவசியமானது உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த பூங்காவை பாதுகாத்து, ஒரு சிறந்த சமூக பூங்காவாக மேம்படுத்த உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மூத்தோர் பொழுதுபோக்கு மையத்தை இங்கு கட்டுவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



