கூட்டணி கட்சியினர் எங்களை ஜெயிக்க வைக்கனும்.. இல்லையென்றால்.. புதக கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை

"புதிய தமிழகம் கட்சி வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. நேர்மையுடன் பணிபுரிந்திருந்தால் 2014, 2019, 2024 தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பேன்
கூட்டணிக் கட்சியினர் பரமக்குடியில் எங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் முதுகுளத்தூர், ராமநாதபுரத்தில் நிற்பவரை தோற்கடிப்போம்.
கூட்டணி அமைப்பது எளிது. ஆனால் ஒத்துழைப்பு பெறுவது மிகவும் கடினம். அதனாலேயே கூட்டணியை அமைப்பதற்கு தாமதம் ஆகிறது".இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



