த.வெ.க.! 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வேட்டை தொடக்கம்…!

சென்னை:- சட்டசபை தேர்தலை முன்னிட்டு த.வெ.க. அரசியல் களம் முழுவதும் தீவிரப்படுத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் வேகமெடுத்துள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் களம் இறங்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் செயல்முறை இன்று முதல் தொடங்கியது.
மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் மனுக்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்றும், தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



