மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது!

புதிய முதல்வர் பதவியேற்ற மறுநாளே மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ளது; பொதுச் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குக்கி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது; அமைதியை நிலைநாட்ட காவல்துறை, துணை ராணுவ படைகள் தீவிரம்.
மணிப்பூரில் தொடர் வன்முறையால் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முன்தினம்தான் விலக்கப்பட்டது.



