வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாரதிய ஜனதாவுடன் அதிமுக, தினகரன் கூட்டணி வைத்திருப்பதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் தாக்கு.

தாம்பரம்:-சென்னை அடுத்த பல்லாவரத்தில் தமிழ்நாடு தலைகுனியாது எனும் பிரச்சார கூட்டம் பல்லாவரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக ஆட்சியை வீழ்த்த வகுக்கும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். அதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது, வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், பாதுகாத்துகொள்ளவே பாஜகவுடன் அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டணி வைத்துள்ளனர். கடந்த சில மாதம் முன்னர் ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்து பேசியதை பார்த்தால் புரியும்.
புகை, மது காட்சிகளுடன் படம் நடித்து சின்னபசங்களை சீரழித்துவிட்டு தற்போது சிறுபான்மையினரை குழப்பவே சூழ்சி அரசியலில் நடிகர் இறங்கியுள்ளார். அதுவும் கட்சி கூட்டத்தில் நடனம் வேறு இவர் எங்களை போட்டி என கூறுவது எங்களுக்கு தான் அவமானம் என த.வெ.க தலைவரை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டே கிடையாது என்றவர், இன்று கூட்டணி அமைத்துக் கொண்டு பேசி வருகிறார். டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டு வைத்தால் தூக்கு போடுவதற்கு சம்மதம் என கூறியவர் இப்போது மாற்றி பேசுகிறார். இவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு திமுகவை ஊழல் ஆட்சி என்கிறார்கள்.
100 கோடி அபராதம் கட்டி வந்தவர்கள் தான் இவர்கள், திமுக மக்கள் நலத்திட்டங்கள் செய்து தொடர் ஆட்சியில் நீடித்து ஏழாவது முறையாகவும் ஆட்சி அமைக்கும்.
மோடி முதல்முறையாக பிரதமராக வரும் முன்னர் கருப்பு பணம் மீட்டு ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் தருவேன் என்றார். பதினைந்து பைசா கூட வரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு என்றார் யாருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்ததா நீங்களே சொல்லுங்கள்.
நேற்று முன்தினம் கட்சி துவங்கியவர்கள் எல்லாம் திமுகவை எதிரி என சொல்கிறார்கள். அவர்கள் கட்சிக் கூட்டத்திலே அவர்கள் டான்ஸ் ஆடி காட்சிகளை பார்க்கும் போது அவர்கள் எங்களை போட்டியாளர் என சொல்வது அவமானமாய் உள்ளது. சின்ன பசங்க பார்க்கும் விதமா குடி சிகரெட் காட்சிகளுடன் நடித்து சிறுவர்களை சீரழித்து விட்டு இப்போது அரசியல் வந்து புகுந்துள்ளார். இவர் படத்தின் டிக்கெட் விலை 2000, இவர் திமுகவை தீய சக்தி என கூறுவது என்ன நியாயம் உன்னால் மோடியை விமர்சிக்க முடியுமா ? சிறுபான்மையினரை குழப்பவும் ஓட்டுகளை பிரிக்கவும் மறைமுகமாக ஒப்பந்தம் போட்டுவிட்டு தான் தமிழக அரசியல் களம் காண்கிறார் இந்த நடிகர்.
வெள்ளை காக்கா ஒன்று காஞ்சிபுரத்தில் பிடிபட்டது அதை பார்க்க கூட தான் கூட்டம் கூட்டமா வந்தாங்க. அது போல தான் நடிகர் ரோட்டுக்கு வந்தா மக்கள் வந்து பார்ப்பாங்க அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க இது நடிகர் வேறு அரசியல் வேறு என்று மக்கள் தெளிவா இருக்காங்க என்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவுக்கே அல்வா கொடுத்தவங்க அதான் அதனை தெரியப்படுத்த இப்ப நாங்க வந்து பொதுமக்கள் கிட்ட அல்வா கொடுத்து அல்வாவை விளக்கி சொல்லுவோம் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
முன்னதாக பேசிய ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன்:- தமிழகத்தின் கல்வி தரம் அமெரிக்கா நாடுகளுக்கு இணையாக உள்ளது. தமிழக மண் பகுத்தறிவு சிந்தனை உள்ள மக்கள் இதனை தடுக்கவே மத்திய பாஜக அரசு கடவுள் பெயராலும் மதம் பெயராலும் பல்வேறு முயற்சி மேற்கொண்டது அது நடைபெறதால் தற்போது செயற்கை கதாநாயகன் உருவாக்கி சிறுபான்மையினரை குழப்ப முயற்சி செய்து வருகிறது. ஆனால் பெண்கள் முன்னேற்றன், சமூக நீதி என வளர்ச்சி பாதையில் தமிழக முதல்வர் பாடுபட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் அதனால் தமிழ்நாடு தலைகுனியாது நல்ல திட்டங்கள் பலமுறை திமுக அளித்தும் கடந்த காலங்களில் போலியான பேச்சுக்கள் ஏமாற்று வேலைகளால் திமுக ஆட்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை மக்கள் பழயதை ஞாபகத்துடன் திமுக ஆட்சியின் சாதனைகளையும் எண்ணிப் பார்த்து, தொழில் புரட்சி, கல்வி பாதையில் செல்லும் தமிழக முதல்வருக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர செய்வார்கள் என்றார்.
பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமுகவினர், பொதுமக்கள் ஆகியோருக்கு அல்வா கொடுத்து மத்திய பட்ஜட்டில் தமிழகம் மட்டும் ஆல்லாமல் இந்தியாவிற்கே திட்டங்கள் இல்லை தெரிவிக்கும் வகையில் அல்வா கொடுத்தார்.



