"காங்கிரசுக்கு தன்மானம்தான் முக்கியம்”- காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சிக்கு தன்மானமே மிக முக்கியம் என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். மேலும், "அதிகார மமதையில் காங்கிரஸை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், காங்கிரஸாருக்கு வந்தே மாதரம், ஜே என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், அவசியமான போது திருப்பி அடிக்கவும் தெரியும்" என கூறியுள்ளார்.



